Wednesday, September 30, 2009

நெஞ்சில் உரமுமின்றி...

பிரபல ஆங்கில நாவலாசிரியர் ஆலிவர் கோல்ட்ஸ்மித் தனது நாவல் ஒன்றில் கூறுவார்~சிறிய மீன்களுக்குப் பேசும் சக்தி கிடைக்குமேயானால் அவை தங்களை திமிங்கலங்களாக நினைத்துப் பேசத் தொடங்கும் என்று. அதுபோலத்தான் இருக்கிறது, ஐக்கிய நாடுகள் சபையில் இலங்கைப் பிரதமர் ரத்தினசிறி விக்கிரமநாயகாவின் பேச்சு. ஐ.நா. சபையின் 64-வது பொதுக் கூட்டத்தில் பேசிய இலங்கைப் பிரதமர் உலக நாடுகளின் கூட்டமைப்புக்கு விடுத்திருக்கும் வேண்டுகோள் (எச்சரிக்கை?) என்ன தெரியுமா? எங்கள் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடாதீர்கள் என்பதுதான்!

இலங்கைப் பிரதமரின் வாக்குமூலப்படியே பார்த்தாலும், கடந்த மே மாதம் முடிவுக்கு வந்த போரின் முடிவில் 2.85 லட்சம் பேருக்கு மேலானவர்கள் தங்கள் இருப்பிடத்திலிருந்து இடம்பெயர்ந்து சொந்த மண்ணில் அகதிகளாக முள்கம்பிகளாலான வேலிக்குள்ளே அடைபட்டுக் கிடக்கிறார்கள். இவர்களில் விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சார்ந்தவர்களை அடையாளம் கண்ட பிறகு ஏனைய மக்கள் அவரவர் ஊர்களில் குடியமர்த்தப்படுவார்கள் என்று முதலைக் கண்ணீர் வடித்திருக்கிறார் இலங்கைப் பிரதமர்.

விடுதலைப் புலிகள் அல்லது விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் என்பதை  அடையாளம் பிரிக்கப் போவது யார்? வட இலங்கைப் பகுதியிலிருந்த பெருவாரியான மக்கள் விடுதலைப் புலிகளின் அனுதாபிகளாக இருந்திருக்கும் வாய்ப்பு உண்டே. அப்படியானால், அவர்கள் அனைவரையும் தண்டிக்கப்போகிறதா இலங்கை அரசு? இனப்படுகொலையைத் தொடர இதுவேகூட ஒரு சாக்காக ஆகி விடாது என்பது என்ன நிச்சயம்?

தனது மக்கள் என்று தமிழர்களை சொந்தம் கொண்டாடும் இலங்கை அரசு, அவர்களுக்கு மருந்தும், உணவும், உடையும் அன்னிய நாடுகள் வழங்க வேண்டும் என்று கையேந்துவதிலிருந்தே, தனது கஜானாவிலிருந்து சல்லிக்காசுகூடத் தமிழர்களுக்குச் செலவிட அந்த அரசு தயாராக இல்லை என்பதைத்தானே எடுத்துக்காட்டுகிறது? முன்பே பலமுறை குறிப்பிட்டதுபோல, அது வளம் கொழிக்கும் அமெரிக்காவாகவே இருந்தாலும் மூன்று லட்சம் பேரைக் கம்பி வேலிக்குள் அமைக்கப்பட்ட முகாம்களில் ஐந்து மாதத்துக்கும் மேலாக சகல வசதிகளுடன் பாதுகாப்பது சாத்தியம்தானா?

ஆயிரக்கணக்கான அகதிகள் குடியமர்த்தம் என்கிற பெயரில் காணாமல் போனதாகக் கூறப்படுகிறது. இதைப்பற்றி எழுதினாலோ, பேசினாலோ, பயங்கரவாதிகளுக்குத் துணைபோனதாகக் கூறி அடக்குமுறைச் சட்டங்கள் பாய்கின்றன. ஜார் மன்னனின் கொடுங்கோல் ஆட்சியைப் பற்றி மகாகவி பாரதி எழுதியதுபோல, "இம்மென்றால் சிறைவாசம் ஏனென்றால் வனவாசம்' என்பது ஈவிரக்கமே இல்லாமல் நடைமுறைப்படுத்தப்படுகிறது.

ஐ.நா. சபையின் வளர்ச்சித் திட்டம் என்கிற போர்வையில் ஹலேஸ் நிறுவனத்துடன் ஓர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருக்கிறார் இலங்கைப் பிரதமர். இதன் மூலம் அம்பாறை மாகாணத்தின் விவசாய வளர்ச்சிக்கு உதவி பெறுகிறது இலங்கை அரசு. இந்த உதவிக்குக் காரணம் அகதிகளைக் குடியமர்த்தி அவர்களுக்கு வாழ்வாதாரம் அளிப்பது என்பதுதான். ஆனால் அதற்கு அவர்கள் தேர்ந்தெடுத்திருக்கும் மாகாணம், பெரிய அளவில் சிங்களவர்களைக் குடியேற்றிப் புதிதாக உருவாக்கப்பட்ட அம்பாறை. தமிழர்களைக் குடியமர்த்துகிறோம் என்கிற போர்வையில் சிங்களவர்களுக்குத்தான் உதவும் இந்தத் திட்டம்.

எங்கள் உள்நாட்டு விவகாரத்தில் ஐ.நா. தலையிடக்கூடாது என்று என்ன தைரியத்தில் இலங்கைப் பிரதமர் கூறுகிறார்? அமெரிக்காவின் விரலசைப்புக்கு ஏற்பச் செயல்படும் ஐ.நா. சபைக்கே மறைமுக எச்சரிக்கை விடுமளவுக்கு இலங்கைக்கு தைரியம் வந்தது எப்படி? சீனாவின் முழுமையான ஆதரவு தனக்கு இருக்கிறது என்கிற ஆணவமா, இல்லை இந்திய அரசு கண்டும் காணாமலும்தான் இருக்கும் என்கிற துணிவா? இத்தனைக்கும் அமெரிக்க அதிபர் ஒபாமாவே இலங்கையில் படுதுயர் அனுபவிக்கும் தமிழ் அகதிகளின் நிலைமை குறித்து வேதனைப்படும் நிலையில், இலங்கை அரசு ஐ.நா. சபை தலையிடாமல் இருக்க வேண்டும் என்று கூறுவது அதிர்ச்சி அளிக்காமல் என்ன செய்யும்?கனடா, ஜெர்மனி, ஆஸ்திரேலியா, பிரான்ஸ் போன்ற நாடுகள் எல்லாம் இலங்கையிலிருந்து அகதிகளாக வந்தவர்களுக்குக் குடியுரிமை வழங்கின. அங்கே நடப்பது ஓர் இனப்படுகொலை என்று உணர்ந்து செயல்பட்டன. ஆனால் நமது இந்தியாவில் நடப்பது என்ன? இன்னும் 115 முகாம்களில் சுமார் 73,572 இலங்கைத் தமிழர்கள் அகதிகளாகத் தங்கியுள்ளனர். சுமார் 30,000 பேர் வெளியே தங்கியுள்ளனர்.

கால் நூற்றாண்டு காலமாக இங்கே வசித்துவரும் இவர்கள் இன்றுவரை அகதிகள்தான். அவர்களுக்குக் குடியுரிமை வழங்க நமது அரசு தயாராக இல்லை.வங்க தேசத்திலிருந்து ஊடுருவி வரும் லட்சக்கணக்கான அகதிகள் இந்தியா முழுவதும் பரவிக் கிடக்கிறார்கள். இவர்களில் முக்கால்வாசிப் பேர் ரேஷன் அட்டையும், வாக்காளர் அட்டையும் வைத்திருக்கிறார்கள். கேட்டால் வங்காளிகள் என்று தப்பித்துக் கொள்கிறார்கள். தேர்தலில் நின்று ஒருவர் சட்டப்பேரவை உறுப்பினரான அவலம்கூட அசாமில் அரங்கேறியது. ஆனால், 25 ஆண்டுகாலமாக இங்கே இருக்கும் இலங்கைத் தமிழர்கள் இப்போதுகூட அகதிகள்தான்.காஞ்சிபுரத்தில் சமீபத்தில் நடைபெற்ற திமுகவின் முப்பெரும் விழா நிகழ்ச்சியில் இவர்களுக்குக் குடியுரிமை வழங்குவது, மீனவர்களுக்கு இலங்கைக் கடற்படையினரின் தாக்குதல்களிலிருந்து பாதுகாப்பு வழங்குவது மற்றும் கச்சத்தீவை மீட்பது போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. தீர்மானம் நிறைவேற்றுவதுடன் நின்றுவிடாமல் இந்தப் பிரச்னைக்குத் தீர்மானமான முடிவையும் காண வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது.

சீனா என்கிற பூச்சாண்டியைக் காட்டி இந்தியாவை எத்தனை காலம்தான் இலங்கை பயமுறுத்தப் போகிறது? நாமும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கப் போகிறோம்? இலங்கையில் தமிழர்கள் சுயமரியாதையுடனும், தனிமரியாதையுடனும் வாழ்ந்தால் மட்டுமே இந்தியா பாதுகாப்புடனும் தலைநிமிர்ந்தும் உலக அரங்கில் வலம்வர முடியும் என்கிற உண்மையை, தில்லித் தலைமைக்கு யார் உணர்த்துவது?

நெஞ்சுரம் கொண்ட கடைசிப் பிரதமர் இந்திரா காந்திதான் என்று தோன்றுகிறதே...

-
நன்றி தினமணி

Monday, September 28, 2009

ஆழ்மனதின் அற்புத சக்திகள்

எண்ணங்களின் சக்தியை ரஷியாவில் வாசிலிவ் ஆய்வு நடத்திக் கொண்டிருந்த காலத்துக்கும் சற்று முன்பே, 1910ஆம் ஆண்டு, ஜப்பானில் டாக்டர் டொமொகிச்சி புகுரை என்ற டோக்கியோவின் இம்பீரியல் பல்கலைகழகத்தின் பேராசிரியர் ஒரு வித்தியாசமான ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்தார். எண்ணங்களையும் புகைப்படம் எடுக்க முடியும் என்பது அவரது ஆராய்ச்சியின் மையக் கருத்தாக இருந்தது.

தன் கண்டுபிடிப்புகளை அவர் வெளியிட்ட போது, ஜப்பானிய அறிவியல் அறிஞர்கள் தீவிரமாக எதிர்க்க, அவர் தன் வேலையை ராஜினாமா செய்ய வேண்டி வந்தது. ஆனால், தன் கருத்தில் ஆழமாக நம்பிக்கை கொண்ட புகுரை கோயா சிகரத்தில் உள்ள ஒரு புத்தமத ஆராய்ச்சிக் கூடத்தில் இருந்து தன் ஆராய்ச்சிகளைத் தொடர்ந்தார். அதை 1931-ல் ஸ்பிரிட் அன்ட் Mய்ச்டெரிஒஉச் Wஒர்ல்ட் என்ற புத்தகத்தில் விவரமாக வெளியிட்டார். ஆனால், அப்போதும் ஜப்பானிய ஆராய்ச்சியாளர்கள் அதை அங்கீகரிக்கவில்லை.


அவருடைய ஆராய்ச்சிக் கருத்துகள் வலிமை பெற ஆரம்பித்தது 1950 ஆம் ஆண்டிற்குப் பின் தான். அதுவும் அறிவியலுக்கு சம்பந்தமே இல்லாத டெட் சிரியோஸ் (1918-2006) என்ற சிகாகோவில் வசித்து வந்த ஒரு குடிகார நபர் மூலம் தற்செயலாக வெளிப்பட்டது. தான் போதையில் இருக்கும் போது தனக்கு வித்தியாசமான காட்சிகள் மிகத் தெளிவாகத் தெரிகின்றன என்றும் கடலிலும் மண்ணிலும் புதைந்து கிடக்கும் புதையல்கள் கூடத் தெளிவாகத் தெரிகின்றன என்றும் தெரிவித்தார். அவரது நண்பர் விளையாட்டாக, "உனக்குத் தெளிவாக மனதில் தெரியும் காட்சிகளில் கவனம் செலுத்திக் கொண்டு இருக்கும் போது நீ வெற்று சுவரைப் பார்த்தபடி காமிராவை வைத்துப் படம் பிடித்தால் வந்தாலும் வரலாம்" என்று சொல்ல, அதை சீரியசாக எடுத்துக் கொண்டு அப்படியே சிரியோஸ் செய்தார்.


ஜூல் இய்சன்பட்
டெட் சிரியோஸ்
ஆனால், அவர் நினைத்தது போல் அதில் புதையுண்ட புதையல்கள் படம் வரவில்லை. அதற்குப் பதிலாக வேறெதோ படங்கள் வந்தன. அந்தப் புகைப்படங்கள் அந்த அறையில் இருந்த பொருள்களின் படங்களாகவும் அவை இருக்கவில்லை. அப்படியானால் வெள்ளைச் சுவரை நோக்கி எடுக்கப்பட்ட புகைப்படத்தில் வந்த பிம்பங்கள் அவருடைய மனதில் இருந்த புதையலைப் பற்றிய எண்ணங்களில் இருந்து வந்திருக்கக் கூடுமா என்ற சந்தேகம் வந்தது. ஆச்சரியப்பட்ட சிரியோஸ் மீண்டும் மீண்டும் அது போல் புகைப்படங்கள் எடுத்து நண்பர்களிடமும், தெரிந்தவர்களிடமும் காட்ட ஆரம்பித்தார்.
இந்தச் செய்தி இல்லினாய்ஸ் நகரின் ஆழ்மன சக்திகளின் ஆராய்ச்சிக் கூடத்தை எட்டவே, அவர்கள் டென்வர் நகரைச் சேர்ந்த மனோதத்துவ நிபுணர் டாக்டர் ஜூல் இய்சன்பட் (1908-1999) என்பவரை செய்தியின் உண்மைத் தன்மையை அறிந்து வருமாறு கேட்டுக் கொண்டார்கள். ஆரம்பத்தில் இய்சன்பட்டுக்கு டெட் சிரியோஸை வைத்து நடத்திய ஆய்வுகள் அவ்வளவாகத் திருப்தி அளிக்கவில்லை. குடிகார டெட் சிரியோஸ் தனக்குக் காட்சிகள் தெளிவாகத் தெரியாத போது போதையில் கத்துவது, உளறுவது, தலையை சுவரிலோ, தரையிலோ இடித்துக் கொள்வது போன்ற செய்கைகளில் ஈடுபட்டது இய்சன்பட்டுக்கு ரசிக்கவில்லை. ஆனால் ஒருசில நேரங்களில் கிடைத்த புகைப்படங்களின் தத்ரூபம் டெட் சிரியோஸை ஒரேயடியாக ஒதுக்கவும் விடவில்லை. இய்சன்பட் டென்வரில் உள்ள தன் ஆராய்ச்சிக் கூடத்துக்கு டெட் சிரியோஸை வரவழைத்து இரண்டாண்டு காலம் ஆராய்ச்சி செய்தார்.


பலர் முன்னிலையில் டெட் சிரியோஸ் செய்து காட்டிய விந்தைகள் சில அற்புதமானவை. ஒரு முறை பார்வையாளர்கள் அவரை பழங்கால ரோதன்பர்க் என்ற நகரப் படத்தை மனதில் எண்ணிப் புகைப்படம் எடுக்கச் சொன்னார்கள். ஓரளவு சரியாகவே செய்து காட்டினார் சிரியோஸ். பின் கொலராடோவில் மத்திய நகரத்தில் உள்ள பழைய ஆப்ரா ஹவுஸ் என்ற இடத்தின் படத்தை புகைப்படமாக்கச் சொன்னார்கள். அதையும் செய்து காட்டிய சிரியோஸ், "இந்த இரண்டு புகைப்படங்களையும் கலக்கி ஒரு புகைப்படம் உருவாக்கட்டுமா?" என்று சொல்ல, பார்வையாளர்கள் உற்சாகமாக செய்து காட்டச் சொன்னார்கள். டெட் சிரியோஸ் உருவாக்கிக் காட்டிய புகைப்படம் அவர் சொன்னது போலவே பழைய ஆப்ரா ஹவுஸில் குறுக்கே உள்ள குதிரை லாயத்தை பிரதிபலிப்பதாக இருந்தது. அதில் செங்கல் கட்டடத்துக்குப் பதிலாக ரோதன்பர்க் நகரப் படத்தில் உள்ளது போல கல்லால் ஆன கட்டிடத் தோற்றம் இருந்தது. ஆப்ரா ஹவுஸ் குதிரைலாயப் புகைப்படத்தையும், இரு காலக்கட்டத்தை இணைத்து அவர் எடுத்த புகைப்படத்தையும் இங்கே நீங்கள் காணலாம்.


1967ல் இய்சன்பட் "டெட் சிரியோஸின் உலகம்" என்ற புத்தகத்தை வெளியிட்டார். அந்தப் புத்தகத்தில் தன் ஆராய்ச்சிகளை விரிவாக ஆதார புகைப்படங்களுடன் விளக்கியிருக்கிறார். ஒரு சில இடங்களை சிரியோஸ் எண்ணப் புகைப்படங்களாக எடுத்து தந்தது மேலிருந்தும், மரக் கிளைகளின் நடுவிலிருந்து எடுத்தது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தியதாகவும் இய்சன்பட் வியப்புடன் கூறியிருக்கிறார். அது போன்ற கோணங்களில் இருந்து எடுப்பது போல் புகைப்படம் எடுக்க முடிவது எப்படி என்பது கேள்விக்குறியாக இருந்தது. பலரும் டெட் சிரியோஸின் நம்பகத் தன்மையை சந்தேகிக்கவே செய்தார்கள் என்றாலும், இது போன்ற ஆற்றல் வெளிப்படுத்துவதில் பல ஏமாற்று வேலைகள், தில்லுமுல்லுகள் செய்ய முடியும் என்பதால் மிகக் கவனமாகத் தன் ஆராய்ச்சிகளைச் செய்ததாக இய்சன்பட் கூறினார்.


பிற்காலத்தில் இது போன்ற ஆய்வுகள் உலகின் பல பகுதிகளிலும் நடக்கத் துவங்கின. ஒருசில ஆராய்ச்சியாளர்கள் மீண்டும் டெட் சிரியோஸை ஆராய்ச்சிக்காக அணுகிய போது அவருடைய அபூர்வ சக்தி குறைய ஆரம்பித்திருந்தது. பிந்தைய ஆராய்ச்சியாளர்களுக்கு அவர் உதவ முடியவில்லை. ஆனாலும் எண்ணப் புகைப்படங்கள் என்றாலே மனோசக்தி ஆராய்ச்சிகளில் ஈடுபாடு உள்ளவர்களுக்கு டெட் சிரியோஸின் நினைவு தான் முதலில் வரும் நிலை இன்றும் இருந்து வருகிறது.


இனியும் ஆழமாகப் பயணிப்போம்...

நன்றி: விகடன்

Thursday, September 24, 2009

3797-ல் உலகம் அழியும்!

1503-ல் இருந்து 1566 வரை வாழ்ந்தவர் மைக்கேல் தி நாஸ்ட்ரடாமஸ். வருங்காலத்தைக் கணிப்பதில் கில்லாடி. 1555-ம் வருடம் 'தி சென்சுரீஸ்' என்கிற புத்தகத்தை எழுதினார் நாஸ்ட்ரடாமஸ். பிரெஞ்சு, லத்தீன், கிரேக்கம் மற்றும் இத்தாலி மொழிகளில் நான்கு வரிக் கவிதைகளால் நிரம்பியிருக்கிறது அந்தப் புத்தகம். அவர் சொன்னது எல்லாம் அப்படியே பலிக்கிறது என்கிறது ஒரு தரப்பு. எல்லாம் உதார் என்று உறுமுகிறது இன்னொரு தரப்பு.'கோரமான பசியுடன் விலங்குகள் நதிகளைக் கடந்து செல்லும். உலகத்தின் பெரும்பகுதி ஹிஸ்டருக்கு எதிராக இருக்கும். அந்த விளைவுகள் உலகையே ஓர் இரும்புக் கூண்டில் அடைக்கும். ஜெர்மனிக் குழந்தைகளுக்கு மட்டும் எதுவுமே புரியாது' என்று எழுதி வைத்திருக்கிறார் நாஸ்ட்ரடாமஸ். இந்தக் கவிதை இரண்டாம் உலகப் போரையும், ஜெர்மனியின் சர்வாதிகாரி ஹிட்லரையும் குறிக்கிறது என்கிறார்கள் ஆதரவாளர்கள். 1665-ம் வருட லண்டன் தீ விபத்து, அமெரிக்க அதிபர் ஜான் கென்னடியின் மரணம், பிரெஞ்சுப் புரட்சி, சேலஞ்சர் விண்கல விபத்து, ட்வின் டவர் தாக்குதல் என நாஸ்ட்ரடாமஸின் கவிதைகளின் செய்திகள் உண்மையில் நிகழ்கின்றன என்று உலகம் எங்கும் நம்புபவர்களின் எண்ணிக்கை கோடிகளில் இருக்கும். சதாம் ஹூசேன், ஒசாமா, ஹிரோஷிமா-நாகஸாகி எனப் பல விஷயங்களைப்பற்றி கொஞ்சம் குழப்பமான வார்த்தைகளால் கவிதை வரைந்திருக் கிறார் நாஸ்ட்ரடாமஸ்.
1566-ம் வருடம் ஜூலை ஒன்றாம் தேதி. 'நாளைக்கு இந்த விஷயத்தைப் பார்த்துக்கொள்வோமே!' என்று நாஸ்ட்ரடாமஸிடம் சொன்னார் ஒருமதகுரு. 'நாளை காலை நான் உயிருடன் இருக்க மாட்டேன்!' என்றுபதில் சொல்லியிருக்கிறார் நாஸ்ட்ர டாமஸ். சொன்ன மாதிரியேமறு நாள் காலை நாஸ்ட்ரடாமஸ் உயிரோடு இல்லை.

தன் மரணத்தையே சரியாகக் கணித்தவர் என்பதால், இன்றும் அவரின் கவிதைகளை வைத்து ஆராய்ச்சி செய்துகொண்டு இருக்கிறார்கள்.


கி.பி. 3797-ல் உலகம் அழியும் என்று எழுதிவைத்திருக்கிறார் நாஸ்ட்ரடாமஸ். ரகசியம் உடையும் நேரமும் அதுதான்!

--கார்த்திகா குமாரி

- ஆனந்தவிகடன்

Monday, September 7, 2009

கூகிள் - ஆரம்ப வரலாறு

ஆரம்ப வரலாறு

கூகிள் 1996ம் வருடம் சனவரி மாதம், லாரி பேஜ்(Larry Page) மற்றும் அவரது சக மாணவரான சேர்ஜி பிரின்(Sergey Brin) என்பவரும் தங்கள் கலாநிதிப் பட்டப் படிப்பிற்காக(Ph.D.) கலிபோர்னியாவிலுள்ள ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தினால் வழங்கப்பட்ட ஆராய்ச்சிக்கான தலைப்பின் (இணையங்கள் இடையிலான கணித தொடர்பு) முடிவில் தோன்றியதாகும். ஆரம்பத்தில் லாரி பேஜின் ஆராய்ச்சிக்கான விடயமாக மட்டுமே இது இருந்த போதிலும் வெகு விரைவிலேயே சக மாணவரும் நெருங்கிய நண்பருமான சேர்ஜி பிரின் இணைந்து கொண்டார். இவர்கள் இருவரும் தமது ஆய்வை இணைய தேடுபொறிக்கான ஒரு ஆய்வாக முன்னெடுத்தனர். இவர்கள் தாம் சேகரித்த தகவல்களின்படி தேடுபொறியில் தேடப்படும் விடயம் எந்த இணைய பக்கங்களில் உள்ளது என்பதையும் அதன் தொடர்புகளையும் அலசி ஆராய்ந்து தேடுபதிலாக பட்டியலிடுவதே சிறந்த முறை எனவும் முடிவு செய்தனர். இது அப்போது பாவனையில் இருந்த தேடுபொறி தனது தேடும் விடயத்தை எந்த இணையப் பக்கம் அதிகம் கொண்டிருந்ததோ அதன் எண்ணிக்கை வரிசையில் (இறங்கு முகமான வரிசை) பதிலாக (கணினியின் திரையில்) கொடுத்ததை விட, தமது தேடுகருகியானது தேடிய விடையத்தின் பக்கங்களை அலசி தேடுபதிலாக வழங்கும் முறை சிறப்பான தொழில் நுட்பம் என்பதில் நம்பிக்கை கொண்டவர்களாக இருந்தார்கள். இவர்கள் தமது ஆராய்ச்சிக்கு புனைபெயராக பாக்ரப்("BackRub") (பின்னால் தடவு அல்லது வருடு) என்ற பெயரை சூட்டியிருந்ததுடன் இந்த ஆய்வு ஒரு இணையத்தின் பின்புல (backlinks) இணைப்புகளுடன் முக்கிய பங்குவகிப்பதனால் அவ்வாறு அர்த்தத்தில் குறிப்பிடனர். இவர்கள் ஆய்வை மிகவும் ஒத்த விதத்தில் தேடு பதிலாலை கொடுப்பத்ற்கு அந்த காலகட்டத்தில் சிறிய தேடு பொறி ராங்டெக்ஸ்(RankDex) வேலைத் திட்டத்தில் இறங்கியும் இருந்தது குறிப்பிடத் தக்கதாகும்.
தேடப்படும் விடையம் அடங்கிய இணையப் பக்கங்களினால் அதிகம் எந்த ஒரு இணையப் பக்கம் இணைக்கப் படுகின்றதோ அதுவே தேடப்படும் விடயத்தின் தொடர்பான பதில் என தமது ஆராச்சியை நியாயப்படுத்தினர். இந்த ஆராச்சி ஸ்ரான்பேஃர்ட் பல்கலைக்களக பட்டப் படிப்புடன் சம்பந்தமான ஆராச்சி என்பதால் தமது விதிகளை அங்கு பரீட்சித்தும் பார்த்ததோடு கூகிள் தோன்றவும் அடிகோலினர். ஆரம்பத்தில் ஸ்ரான்போர்ட் பல்கலைக்கழகத்தின் இணையப் பக்கங்களை தேடுவதற்காக google.stanford.edu என்ற பெயர் பாவிக்கப்பட்ட போதிலும் பின்னர் கூகிள்.கொம் (google.com) என 1997ம் ஆண்டு செப்ரம்பர் 15ம் நாள் பதிவு செய்யப்பட்டதுடன் 1998 செப்ரம்பர் 15ம் நாள் கூகிள் தனியார் நிறுவனமாகவும் பதியப்பட்டது. 1998 செப்ரம்பர் 7இல் நண்பர் ஒருவரின் கார்த் தரிப்பிட கொட்டகையில் கூகிள் வர்த்தக நோக்குடன் ஆரம்பிக்கப்பட்டது. புதிய நிறுவனத்திற்கு முதலிடுவதில் பலரையும் அணுகி ஒரு வழியாக இறுதியில் 1.1 மில்லியன் டொலர்களை சேர்த்து கொண்டனர்.
மேலும், இவர்கள் ஆரம்பத்தில் மிக தீவிரமாக கூகோல்.கொம் (googol.com)என பெயர் சூட்டுவதில் மிகுந்த ஆர்வமாக இருந்தனர். கூகோல் என்பதன் அர்த்தம் 1 ஐ தொடர்ந்து வரும் 100 பூச்சியங்கள் கொண்ட எண்ணைக் குறிக்கும் பெயராகும். ஆனால், அது சிலிக்கன் பள்ளத்தாக்கு (Silicon Valley) பொறியியலாளர் ஒருவரால் ஏற்கனவே பதிவுசெய்யப்பட்டிருந்ததுடன் அந்தபெயரை அவர் அப்போது விட்டுக் கொடுக்கவும் சம்மதிக்கவில்லை. எனவே, இவர்கள் தமது நிறுவனத்திற்கு தீவிரமாக பெயர் தேடும் போது தவறுதலாக தட்டச்சு செய்தபோது பிறந்ததே "கூகிள்" என்ற புதிய சொல். கார் கொட்டகையில் இருந்து இந்த நிறுவனத்தின் அலுவலகங்கள் 1999ம் மார்ச் மாதம் சிலிக்கன் பள்ளத்தாக்கிற்கு மாற்றலாகின. அங்கு வெவ்வேறு இரு இடங்களில் "கூகிள்" இயங்கிய போதிலும் விரைவான வருவாய்,வளர்ச்சி காரணமாக பெரிய கட்டிட தொகுதிக்கு வாடகை அடிப்படையில் 2003இல் மாற்றலாயிற்று. அன்றிலிருந்து அதே இடத்திலேயே இருப்பதுடன் அக் கட்டிடத் தொகுதி கூகிள்பிளெக்ஸ் (googolplex) எனவும் பெயர் பெற்றது. பின்பு 2006 இல் 319 மில்லியன் டொலர்களை கொடுத்து அந்த கட்டிடத்தொகுதியை கூகிள் கொள்முதல் செய்தும் கொண்டது.
கூகிள் தனது எளிமையான தேடி மூலமாக அடிக்கடி உபயோகிக்கும் இணைய பாவனையாளர்களுடன் புதிது புதிதாகவும் பலரையும் கவரத் தொடங்கியது. தேடுபொறியில் தேடப்படும் சொற்களுடன் தொடர்பான விளம்பரங்களை 2000ம் ஆண்டில் இருந்து கூகிள் சேர்க்கத் தொடங்கியதோடு விளம்பரங்கள் இணைப் பக்கங்களின் அமைப்பை குலைக்காமலும், இணைப் பக்கங்கள் கணனி திரைகளில் விரைவாக தோன்று வதற்காகவும் ஆரம்பத்தில் எழுத்துருக்களில் மட்டும் வடிவமைக்கப் பட்டிருந்தன. தேடுபொறியில் தேடலை ஒத்த விளம்பரங்கள் கேள்வி மூலமாக அல்லது சொடுக்கப்படும் விகிதத்திலும் விற்கப்படுவதுடன் இவற்றின் ஆரம்ப விலை 0.05 டொலராகவும் உள்ளது. இந்த தேடு விடையத்தை ஒத்த விளம்பரத்தினை இணையத் தளங்களில் காண்பிக்கும் நுட்பமானது Goto.com என்ற நிறுவனமே முன்னோடிகளாக இருந்தார்கள். கோட்டு.கொம் என்ற இதன் பெயர் "ஒவேச்சர் சேர்விசஸ்" (Overture Services) ஆகவும் பின்நாளில் யாகூ! இனால் கொள்முதல் செய்யப்பட்டு "யாகூ சேர்ச் மாக்கெற்றிங்" (Yahoo! Search Marketing) ஆயிற்று. கூகிளுடன் போட்டி ஆகி இருந்த பல புதிய நிறுவனங்களும் இணையத்தள சந்தையில் தோற்று விட "கூகிள்" லாபமீட்டுவதுடன் உறுதியாக வெற்றியீட்டி வருகிறது.
ஆரம்பத்தில் "கூகோல்" (googol) என்பது அதன் அர்த்தம் கண்டு விரும்பப் பட்ட போதிலும் எழுத்துப் பிழைகளுடனான "கூகிள்" என்பது மிக பிரபலம் ஆயிற்று. இன்று பெரும்பாலும் ஒவ்வொரு மொழியிலும் அதிகம் பேசப்படும் வினைச் சொல்லாக மாறி விட்ட இதை ஒக்ஸ்ஃபோர்ட் அகராதி 2006இல் சேர்த்ததுடன் அதனை 'கூகிள் தேடுபொறி இணையத்தில் தகவல் பெற பாவிக்கப்படுகின்றது' என அர்த்தப் படுத்தியும் உள்ளது. கூகிள் தேடுபொறி தேடுதலுக்கான பட்டியலிடும் தொழில் நுட்பமானது 2001ம் செப்ரம்பர் 4ம் திகதி காப்புரிமம் செய்யப் பட்டதுடன் ஸ்ரான்ஃபோர்ட் பல்கலைக்கழக அதிகாரபூர்வ கண்டுபிடிப்பாளர் காப்புரிமத்திலும் பட்டியலிடப் பட்டுள்ளது.

[தொகு] கூகிளின் பங்குச் சந்தை வருகை

கூகிள் தேடுபொறி 1998 செப்ரம்பர் 7இல் அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் நிறுவப்பட்டது. இணைய தேடுதலிலும் இணைய விளம்பரத்திலும் சிறப்பு பங்கு வகிக்கும் கூகிள் 2004ம் ஆகஸ்ட் 19ம் நாளில் இருந்து பொது மக்கள் நிறுவனமாக தன்னை பதிவு செய்துகொண்டது. இந்த நிறுவனத்தில் 15,916 முழுநேர வேலையாட்கள் (2007 செப்டம்பர் 30ம் கணக்கெடுப்பின் படி) பணியாற்றுவதுடன் இதுவே நாஸ்டாக் (NASDAQ) இல் பட்டியலிடப்பட்ட பொது நிறுவனங்களில் பெரியதுமாகும். லாரி பேஜ் , சேர்ஜி பிரின் ஆகியோரினால் சேர்ந்து உருவாக்கப்பட்ட கூகிள் நாஸ்டாக் (NASDAQ) பங்குச்சந்தையில் வந்த 2004ம் ஆகஸ்டு 19 அன்று $1.67 பில்லியன்களுக்கு பங்குகள் விற்பனை ஆகியதுடன் $23 பில்லியன் மேலாக கூகிள் நிறுவனம் மதிப்பாகியிருந்தது. படிப்படியாக தொடரான புதிய பொருட்களின் வடிவமைப்பு, மற்றய நிறுவனங்களை கொள்முதல் செய்வது, பங்குதாரர்கள், ஆரம்பத்தில் இருந்த விளம்பர யுக்தி விஸ்தரிப்பு, இணைய மின்-அஞ்சல் (webmail), இணையவழி வரைபடம்(Google Earth), அலுவலக உற்பத்தி ஆகியவற்றுடன் இணையவழி வீடியோ(video) வையும் இணைத்து கொண்டதன் மூலமாக பன்மடங்கு (4மடங்கிலும் மேலாக) மதிப்பில் கூகிள் தன்னை தற்போது உயர்த்திக் கொண்டுள்ளது. அத்துடன் 2005ம் யூன் மாதம் $52 பில்லியன் சந்தைப் பெறுமதியுடன் $7 பில்லியன் பணத்தினையும் கூகிள் தம் வசம் வைதிருந்தது. இத்தனைக்கும் "பிசாசு மாதிரி இருக்காதீர்" (don't be evil) (இதையே தனது வியாபார அடை மொழியாக கூகிள் பதிவு செய்திருந்தது.), என மற்றயவர்களை ஆரம்பத்தில் இருந்து கூறிவந்த கூகிள் தற்போது தனது நிலைப் பாட்டினை நியாயப்படுத்தி வருகிறது. மேலும், கூகிள் தனது தேடுபொறியின் இலச்சனை (logo) யில் பலவித கண்கவர் யுக்திகளை சிறப்பு நாட்களில் கூகிள் டூடிள்ஸ் (Google Doodles) என வெளியிட்டும் வருவதும் யாருமறிந்ததே.

[தொகு] மூலதனமும் பங்குச் சந்தையும்

முதலாவது முதலீடாக ஒரு இலட்சம் டொலர்களை சன் மைக்கிரோசிஸ்டம்ஸ் (Sun Microsystems) இன் ஸ்தாபகர்களில் ஒருவர் மூலம் மட்டுமே பெற்றனர் என்பதுடன், அப்போது கூகிள் நிறுவனம் தோன்றி இருக்கவுமில்லை. இந்த முதலீட்டின் பின் 6 மாதங்கள் சென்ற நேரத்தில் பல முதலீட்டாளர்கள் முதலிட முன் வந்தும் இருந்தனர். அத்துடன், 2003ம் ஒக்டோபர் மாதத்தில் பங்குச் சந்தையில் கூகிளை எடுத்துச்செல்ல ஆலோசிக்கும் வேளை மைக்கிரோசொஃப்ட் (Microsoft) புகுந்து பங்காளியாக அல்லது தத்து எடுப்பதற்கு எடுத்த முயற்சி கைகூடாமற் போயிற்று. ஜனவரி 2004இல் உலகின் மிகப் பெரிய முதலீட்டு வங்கிகளான மோர்கன் ஸ்ரான்லி (Morgan stanley), கோல்மான் சாச்ஸ் (Goldman Sachs) இனால் பங்குச் சந்தையில் சேர்வதற்கான ஏற்பாடு தொடங்கபட்டது. பங்குச் சந்தையில் முதல்நாள் சேரும் வேளை $4 பில்லியங்களாவது திரட்டப்படும் எனவும் கணக்கிட்டனர்.
இதனிடையே கூகிளானது 2004ம் மேமாதம் இரு பெரிய முதலீட்டளர் வங்கியில் ஒன்றான கோல்மானை வெட்டி விட்டு வேறொரு பிரபல்யமான வங்கியை இணைத்துக் கொண்டு 2004ம் ஆகஸ்டு 19ம் நாள் முதல் முதலாக பங்குச் சந்தைக்கு 19,605,052 பங்குகளுடன் வந்தபோது ஒவ்வொரு பங்கும் $85க்கு விற்கப்பட்டது. முதல் நாள் மொத்தமாக கைமறிய பங்குகள் 22,351,900 என்பதுடன் அன்றைய இறுதி நேர விலை $100.34 ஆக மூடப்பட்டது, இது உத்தேசிக்கப்பட்ட அளவு தொகையை விடவும் மிக குறைவாகவும் இருந்தது. எனினும் அன்று கூகிளின் இரட்டையர்கள் தம்வசம் 271 மிலியன் பங்குகளை வைத்திருந்ததன் மூலமாக $23 பிலியன்கள் மேல் நிறுவனத்தை மதிப்பு ஏற்றியதோடு $1.67 பில்லியன்களை பணமாக திரட்டியும் கொண்டனர். அத்தோடு கூகிளில் பணியாற்றும் பலரையும் அன்று திடீர் கடதாசி டொலர் மில்லியனர்கள் ஆக்கியதும் அல்லாமல் வியாபார எதிரியாக இருக்கக் கூடிய யாகூ! (8.4 மில்லியன் பங்குகளை நட்டஈடாக பெற்றுக் கொள்ள ஒரு பேரத்தில் பங்குச் சந்தையின் 10 நாள் முன் உடன் பட்டன). ஐயும் ஆக்கியிருந்தது. இதன் அபார தொடர் வளர்ச்சியில் 2005ம் யூன் மாதம் கூகிள் நிறுவனம் $52பில்லியன்கள்(பங்குகள் தவிர $7பில்லியன்கள் பணமாக) மேல் மதிப்பானதுடன் இதுவே உலகின் மிகப்பெரிய பெறுமதியுள ஊடகவியல் நிறுவனம் ஆயிற்று. தொடற்சியாக பங்குகள் ஏற்ற இறக்கம் கண்டு 2007ம் ஒக்டோபரில் ஒரு பங்கு $700 ஆக இருந்த கூகிளின் பங்குகள் அமெரிக்கா, லண்டன் பங்குச் சந்தைகளில் பட்டியலிடப் பட்டுள்ளது.

[தொகு] சுவீகரிப்பு, கூட்டுக்கள்

கூகிள் பெப்ரவரி 2003இல் வெப்லொக் (weblog) இன் முன்னோடியும் புளொக்கர்(Blogger) இன் சொந்தக்காரரான பைரா லாப்ஸ் (Pyra Labs)ஐ சொந்தமாக்கிற்று. உலக இணையத் தளத்தின் 84.7 விகிதமான தேடுதல்களை 2004ம் முற் பகுதியில் கூகிள் நிறுவனமானது யாகூ, ஏ.ஓ.எல் (AOL), சி.என்.என் (CNN) ஆகியவற்றுடன் கூட்டுச் சேர்ந்து செய்திருந்தது, பின்பு 2004ம் பெப்ரவரி இல் யாகூ விலகிக் கொண்டு தனது சொந்த தேடுபொறியை தொடங்கிற்று. யாகூ விலகிக் கொண்ட விடயம் கூகிள் நிறுவனம் சந்தித்த ஒரு பெரிய சவாலாக இருந்த போதிலும் ஜீமெயில்( Gmail), ஓர்க்குற்(orkut), மற்றும் புதிய பல யுக்திகள் மூலமாக தன்னை நிலை நிறுத்திக் கொண்டுள்ளது.
அத்துடன் கூகிள் நிறுவனம் தனது நீண்டகால ஆராய்ச்சிக்கான நாசா (NASA) இன் கூட்டு 2005ம் செப்டம்பரிலும், இணையத்திற்கான கூட்டு "ஏ.ஓ.எல்" (AOL)லுடன் டிசம்பர்இலும் உருவாக்கிக் கொண்டது. மேலும், சன்மைக்கிரோ (Sun Microsystems) உடன் தொழில் நுட்ப்பத்தை பகிர்ந்து கொள்வதோடு, கூகிள் நிறுவனம் தனது ஊளியர்களை ஓப்பிண் ஆபிஸ்(OpenOffice.org) நிறுவன வேலைகளிலும் வாடகைக்கு அமர்த்தி உள்ளது. இதனிடையே 2004கும் 2006ம் வருட இறுதிக்கும் உள்ள காலகட்டத்தில் பல மென்பொருள் முன்மாதிரி நிறுவனங்களையும் வானோலி விளம்பர நிறுவனம் டிமார்க்(dMarc)ஐ தம் வசமாக்கிக் கொண்டதுடன் $900 விளம்பர உடன்பாட்டை மைஸ்பேஸ் (MySpace) உடன் செய்தனர். கூடவே, 2006இன் இறுதி காலத்தில் யூ டியூப் (YouTube) என்ற மிகவும் பெயர் பெற்ற இணையத்தள வீடியோ $1.65 பில்லியனிற்கு கூகிளினால் கொள்முதலானது, இத்துடன் விக்கி தொழில் நுட்பத்தை வடிவமைத்த ஜொட்ஸ்பொட் (JotSpot)ம் சொந்தமாக்கப்பட்டது.
இத்துடன் நிற்காமல் 2007ம் ஏப்ரலில் $3.1பில்லியன் கொடுத்து டபள் கிளிக் (DoubleClick)ஐ கொள்முதல் செய்ததோடு 2007ம் யூலை 9இல் பொஸ்டினி (Postini)யும் கொள்முதல் செய்து கொண்டது. இத்தனைக்கும் மத்தியில் தனது பரம எதிரியான மைக்கிரோசொப்ற் (Microsoft) இன் பல திறமை உள்ளவர்களையும் தம்வசம் ஈர்த்ததுடன் அந் நிறுவனம் தொடர்பாக தொடரப்பட்ட வழக்கினை நீதிமன்றம் வெளியே இரகசியமாக 2005 டிசம்பர் 22இல் தீர்த்தும் கொண்டது. கூகிள் நிறுவனம் 2006ல் ".மோபி" (.mobi) எனப்படும் கைத்தொலைபேசி இணைய முகவரி தோற்றத்திற்கு காரண கர்த்தாவாகவும், முதலீடு இட்ட நிறுவனமாகவும் முன்நிலை படுத்தியதோடு ஸீங்கு.மோபி (Zingku.mobi), கூகிள்.மோபி (Google.mobi)இன் சொந்தக் காரருமாகவும் கூகிள் உள்ளது.

[தொகு] நன்கொடை

2004ல் இலாபம் ஈட்டாத "கூகிள்.ஓர்க்" (Google.org) ஐ நிறுவியதோடு ஆரம்ப நிதியாக $1பிலியன் வைப்பு செய்யப்பட்டது. இந் நிறுவனத்தின் முன்நிலை கவனிப்புக்களாக சூழல் வெப்பமாகுதல் தடுத்தல்,உலக சுகாதாரம்,உலக வறுமை ஒழிப்பு என்பன உள்ளடக்கப் பட்டுள்ளது. அத்துடன் இந்த அமைப்பின் முதல் திட்டமாக மின்சாரத்தில் இயங்கும் வகனங்களை வடிவமைக்கும் திட்டம் டாக்டர்.லாரி (Dr.Larry) தலைமையில் தொடங்கப் பட்டுள்ளது.

Sunday, September 6, 2009

Eat Less Rice!

1.Eat Less Rice!

The human body was never meant to consume rice! You see, our genes have hardly changed in more than 30,000 years. However, our food choices and lifestyle have changed dramatically. The caveman would hardly recognise our food or way of life.

Caveman food was never cooked as fire was not yet tamed. Thus, he ate only those foods that you can eat without treatment with or by fire.. He ate fruits, vegetables, fish (sushi anyone?), eggs, nuts and meat. Yes, even meat! You can even eat meat raw if you were starving in the forest. You have the necessary enzymes to digest meat.

However, rice, like wheat and corn, cannot be eaten raw. It must be cooked. Even if you were starving in the desert, you cannot eat rice in the raw form. This is because we do not have the system of enzymes to break rice down. You were never meant to eat rice. To make matters worse, you not only eat rice, but also make it the bulk of your food.

In some parts of Asia , rice forms up to 85% of the plate. Even if you take rice, keep it to a minimum. Remember, it is only for your tongue - not your body. Actually, rice and other grains like wheat and corn are actually worse than sugar. There are many reasons:

Rice becomes sugar - lots of it! This is a fact that no nutritionist can deny: rice is chemically no different from sugar. One bowl of cooked rice is the caloric equal of 10 teaspoons of sugar. This does not matter whether it is white, brown or herbal rice. Brown rice is richer in fibre, some B vitamins and minerals but it is still the caloric equal of 10 teaspoons of sugar. To get the same 10 teaspoons of sugar, you need to consume lots of kangkong-10 bowls of it.

2.Rice is digested to become sugar.

Rice cannot be digested before it is thoroughly cooked. However, when thoroughly cooked, it becomes sugar and spikes circulating blood sugar within half an hour-almost as quickly as it would if you took a sugar candy. Rice is very low in the 'rainbow of anti-oxidants. '
This complete anti-oxidant rainbow is necessary for the effective and safe utilisation of sugar. Fruits come with a sugar called fructose. However, they are not empty calories as the fruit is packed with a whole host of other nutrients that help its proper assimilation and digestion.

3.Rice has no fibre.

The fibre of the kangkong fills you up long before your blood sugar spikes. This is because the fibre bulks and fills up your stomach. Since white rice has no fibre, you end up eating lots of 'calorie dense' food before you get filled up. Brown rice has more fibre but still the same amount of sugar.

4.Rice is tasteless-sugar is sweet.

There is only so much that you can eat at one sitting. How many teaspoons of sugar can you eat before you feel like throwing up? Could you imagine eating 10 teaspoons of sugar in one sitting?

Rice is always the main part of the meal. While sugar may fill your dessert or sweeten your coffee, it will never be the main part of any meal. You could eat maybe two to three teaspoons of sugar at one meal. However, you could easily eat the equal value of two to three bowls (20-30 teaspoons) of sugar in one meal. I am always amused when I see someone eat sometimes five bowls of rice (equals 50 teaspoons of sugar) and then ask for tea tarik kurang Manis!

There is no real 'built in' mechanism for us to prevent overeating of rice: How much kang Kong can you eat? How much fried chicken can you eat? How much steamed fish can you eat? Think about that!

In one seating, you cannot take lots of chicken, fish or cucumber, but you can take lots of rice.

5.Eating rice causes you to eat more salt.

As rice is tasteless, you tend to consume more salt-another villain when it comes to high blood pressure. You tend to take more curry that has salt to help flavour rice. We also tend to consume more ketchup and soy sauce , which are also rich in salt.

6.Eating rice causes you to drink less water.

The more rice you eat, the less water you will drink as there is no mechanism to prevent the overeating of rice. Rice, wheat and corn come hidden in our daily food. As rice is tasteless, it tends to end up in other foods that substitute rice like rice flour, noodles and bread. We tend to eat the hidden forms, which still get digested into sugar.

Rice, even when cooked, is difficult to digest. Can't eat raw rice? Try eating rice half cooked. Contrary to popular belief, rice is very difficult to digest. It is 'heavy stuff'. If you have problems with digestion, try skipping rice for a few days. You will be amazed at how the problem will just go away.

Rice prevents the absorption of several vitamins and minerals. Rice when taken in bulk will reduce the absorption of vital nutrients like zinc, iron and the B vitamins.

7.Are you a rice addict?

Going rice-less may not be easy but you can go rice-less. Eating less rice could be lot easier than you think. Here are some strategies that you can pursue in your quest to eat less rice:

8.Eat less rice-cut your rice by half.

Barry Sears, author of the Zone Diet, advises 'eating rice like spice'. Instead, increase your fruits and vegetables. Take more lean meats and fish. You can even take more eggs ( If you are a Carnivorous) . I suggest vegetables and nuts.

9. Have 'rice less' meals.

Take no rice or wheat at say, breakfast. Go for eggs instead( If you are a Carnivorous) . I suggest fruits and nuts. Go on 'riceless' days. Go 'western' once a week.

Take no rice and breads for one day every week. That can't be too difficult. Appreciate the richness of your food. Go for taste, colours and smells. Make eating a culinary delight. Enjoy your food in the original flavours.

Avoid the saltshaker or ketchup. You will automatically eat less rice.

Eat your fruit dessert before (Yes! No printing error) your meals. The fibre rich fruits will 'bulk up' in your stomach. Thus, you will eat less rice and more fruits. It's your life. Decide what you want to eat! But eat less rice!

Tuesday, June 16, 2009

வானலை வளர்தமிழ் அமைப்பின் தமிழ்த்தேர் இலக்கிய மாத இதழின் நான்காவது ஆண்டு விழா மற்றும் “சுப்ரமணியபுரம்” திரைப்பட குழுவினருக்கு பாராட்டு விழா

துபாயில் ஏ.ஆர் ரஹ்மான், மற்றும் “சுப்ரமணியபுரம்” திரைப்படக் குழுவினருக்குப் பாராட்டு, தமிழ்த்தேர் ஆண்டுவிழா காட்சிகள்.

வானலை வளர்தமிழ் அமைப்பின் தமிழ்த்தேர் இலக்கிய மாத இதழின் நான்காவது ஆண்டு விழா மற்றும் “சுப்ரமணியபுரம்” திரைப்பட குழுவினருக்கு பாராட்டு விழா, துபாய் சஃபா பார்க் அருகில் உள்ள எமிரேட்ஸ் இங்கிலீஸ் ஸ்பீக்கிங் பள்ளியின் உள்ளரங்கில் நடைபெற்றது.


விழாவின் சிறப்பு விருந்தினர்களாக முனைவர்.பர்வின் சுல்த்தானா, கவிஞர்.யுகபாரதி மற்றும் சுப்ரமணியபுர பட இயக்குனர் சசி, நடிகர் ஜெய், இசையமைப்பாளர் ஜேம்ஸ்வசந்தன், “கண்கள் இரண்டால்” பாடல் புகழ் பாடகர் பெல்லிராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

பார்வையாளர்களின் ஒரு பகுதி...விழாவிற்கு சேர்த்தது மேலும் சுருதி...

வந்தே மாதரம் பாடலுக்கு குழந்தைகள் ஆடிய காட்சி பாடல் முடிந்ததும் விழாவின் சிறப்பு பகுதியாக ஆஸ்கார் புகழ் ஏ.ஆர்.ரஹ்மானை பாராட்டி கவுரவிக்கும் விதமாக அனைவரும் எழுந்து நின்று கரகொலி ஒலித்த காட்சி விழாவிற்கு சேர்த்தது மேலும் மாட்சி.

சங்கே முழங்கு பாடலுக்கான ஆடல்...
ஆண்டு விழா மலருடன் அனைவரும்...
மேடையில் பிரபலங்கள்
கவிஞர் யுகபாரதி மற்றும் முனைவர் பர்வின் சுல்த்தானா

சுப்ரமணியபுர பட இயக்குனர் சசி, மற்றும் நடிகர் ஜெய்

இசையமைப்பாளர் ஜேம்ஸ்வசந்தன் மற்றும் இயக்குனர் சசி
ஜேம்ஸ்வசந்த் நடத்திய "தமிழ்ப்பேசு தங்கக்காசு" பாணியில் நடத்திய
"தமிழோடு விளையாடு"
"த்வனி" அமைப்பு சார்பாக "தமிழ்த்தேரின்" படைப்பாளர்களை பதக்கம் அணிவித்து கௌரவித்த மாட்சிகளை படம் பிடித்த காட்சிகள்...

விழா அரங்கிற்கு வெளியே ஏற்பாடு செய்யப்பட்டிருந்த "ப்ரைம் மெடிகல் சென்டரின்" இலவச மருத்துவ முகாம்.

குடந்தை அசரப், திண்டுக்கல் சரவணன் மற்றும் திருச்சி சரவணக்குமாரின் நகைச்சுவை விருந்து மற்றும் ஜேம்ஸ்வசந்தின் தமிழோடு விளையாடு நிகழ்ச்சியுடன் விழா இனிதே நிறைவுற்றது.

விழா இரவு பதினொரு மணிவரை சென்றாலும் மக்கள் ஒரு இலக்கிய கலை விழாவைக் கூட்டம் கலையாமல் ரசித்துப் பார்த்த விதம், விழாவிற்கு கிடைத்த இரட்டைச்சதம்.

Sunday, February 1, 2009

Build Self Confidence

Self confidence is the difference between feeling unstoppable and feeling scared out of your wits. Your perception of yourself has an enormous impact on how others perceive you. Perception is reality — the more self confidence you have, the more likely it is you’ll succeed.

Although many of the factors affecting self confidence are beyond your control, there are a number of things you can consciously do to build self confidence. By using these 10 strategies you can get the mental edge you need to reach your potential.

1. Dress Sharp
Although clothes don’t make the man, they certainly affect the way he feels about himself. No one is more conscious of your physical appearance than you are. When you don’t look good, it changes the way you carry yourself and interact with other people. Use this to your advantage by taking care of your personal appearance. In most cases, significant improvements can be made by bathing and shaving frequently, wearing clean clothes, and being cognizant of the latest styles.

This doesn’t mean you need to spend a lot on clothes. One great rule to follow is “spend twice as much, buy half as much”. Rather than buying a bunch of cheap clothes, buy half as many select, high quality items. In long run this decreases spending because expensive clothes wear out less easily and stay in style longer than cheap clothes. Buying less also helps reduce the clutter in your closet.

2. Walk Faster
One of the easiest ways to tell how a person feels about herself is to examine her walk. Is it slow? tired? painful? Or is it energetic and purposeful? People with confidence walk quickly. They have places to go, people to see, and important work to do. Even if you aren’t in a hurry, you can increase your self confidence by putting some pep in your step. Walking 25% faster will make to you look and feel more important.

3. Good Posture
Similarly, the way a person carries herself tells a story. People with slumped shoulders and lethargic movements display a lack of self confidence. They aren’t enthusiastic about what they’re doing and they don’t consider themselves important. By practicing good posture, you’ll automatically feel more confident. Stand up straight, keep your head up, and make eye contact. You’ll make a positive impression on others and instantly feel more alert and empowered.

4. Personal Commercial
One of the best ways to build confidence is listening to a motivational speech. Unfortunately, opportunities to listen to a great speaker are few and far between. You can fill this need by creating a personal commercial. Write a 30-60 second speech that highlights your strengths and goals. Then recite it in front of the mirror aloud (or inside your head if you prefer) whenever you need a confidence boost.

5. Gratitude
When you focus too much on what you want, the mind creates reasons why you can’t have it. This leads you to dwell on your weaknesses. The best way to avoid this is consciously focusing on gratitude. Set aside time each day to mentally list everything you have to be grateful for. Recall your past successes, unique skills, loving relationships, and positive momentum. You’ll be amazed how much you have going for you and motivated to take that next step towards success.

6. Compliment other people
When we think negatively about ourselves, we often project that feeling on to others in the form of insults and gossip. To break this cycle of negativity, get in the habit of praising other people. Refuse to engage in backstabbing gossip and make an effort to compliment those around you. In the process, you’ll become well liked and build self confidence. By looking for the best in others, you indirectly bring out the best in yourself.

7. Sit in the front rowIn schools, offices, and public assemblies around the world, people constantly strive to sit at the back of the room. Most people prefer the back because they’re afraid of being noticed. This reflects a lack of self confidence. By deciding to sit in the front row, you can get over this irrational fear and build your self confidence. You’ll also be more visible to the important people talking from the front of the room.

8. Speak up
During group discussions many people never speak up because they’re afraid that people will judge them for saying something stupid. This fear isn’t really justified. Generally, people are much more accepting than we imagine. In fact most people are dealing with the exact same fears. By making an effort to speak up at least once in every group discussion, you’ll become a better public speaker, more confident in your own thoughts, and recognized as a leader by your peers.

9. Work out
Along the same lines as personal appearance, physical fitness has a huge effect on self confidence. If you’re out of shape, you’ll feel insecure, unattractive, and less energetic. By working out, you improve your physcial appearance, energize yourself, and accomplish something positive. Having the discipline to work out not only makes you feel better, it creates positive momentum that you can build on the rest of the day.

10. Focus on contribution
Too often we get caught up in our own desires. We focus too much on ourselves and not enough on the needs of other people. If you stop thinking about yourself and concentrate on the contribution you’re making to the rest of the world, you won’t worry as much about you own flaws. This will increase self confidence and allow you to contribute with maximum efficiency. The more you contribute to the world the more you’ll be rewarded with personal success and recognition.