
வரைந்து வைத்த ஓவியமே !
காதலர்கள் நெஞ்சினிலே
என்றும் வாழும் காவியமே !!
எத்தனையோ கவிஞர்கள்
பாடிப்போன பின்னும் !
ஒய்யாரமாய் உலவுகிறாய்
உயரத்தில் இன்னும் !!
உனைச் சுற்றிச் சுற்றி பார்த்துவரும்
பலருடைய எண்ணம் !
ஓர்நாள் சுற்றுலாவாய் வந்து பார்ப்பர்
இதுவே திண்ணம் !!
அறிவியலார் பலர் வந்து
செய்துவிட்டார் ஆராய்ச்சி!
இருந்தாலும் எங்கிருந்தோ
புரிகின்றாய் ஓர் ஆட்சி!!
உனை பெண்ணோடு ஒப்பிடவே
என்னோடும் பல சாட்சி!
உன்னைக் கண்டுவந்த எல்லோரும்
காணுகின்ற ஓர் மகிழ்ச்சி!!
முதன்முதலில் தொட்டதினால்
அவன்பெயரும் ஆர்ம்ஸ்ட்ரோங்கா?
அல்லது
அவன் "ஆர்ம்" "ஸ்ட்ராங்காய்" இருப்பதனால்
முதன்முதலில் தொட்டானா ? !
உனக்குள்ளும் இருக்கிறதோ
ஓர் பெரிய சோகக் கதை!
உனைக் கண்டஉள்ளம் காண்கிறதே
என்றும் அந்த பெரிய கறை! !
பெளர்ணமியாய் இருந்துகொண்டு
பல காதல் வார்வைத்தாய்
இருந்தும்
அமாவாசையாகி ஏனோ
பல மனதை நோகவைத்தாய் ! !
நீ முழுநிலவாய் இருப்பதையே
விரும்புது இப் பார் !
உன் மறுபுறத்தை இப்பூமியில்
கேட்பதுவும் யார் !!
வளி மண்டலம் சென்று
வந்த மானிடர்கள் எல்லாம் !
வழி அமைத்து அiழைக்கின்றார்
நாம் ஓர்நாள் செல்வோம் !!
அமிழ்தாக இருக்கிறதே
கேட்கின்ற பல சொல்லும் !
தமிர்த்தேரும் ஒருநாளில்
மெதுவாக அங்கு செல்லும் !!!..
- சிம்மபாரதி